நாலாயிரம் திவ்ய பிரபந்தம்
பெரியாழ்வார் பாடியது
புள்ளினை வாய் பிளந்திட்டாய்; பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணை விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய்!
பொருள்:- கொக்காக வந்த அசுரனைக் கொன்ற கண்ணனே! கொல்ல
வந்த யானையின் தந்தத்தை ஒடித்தவனே! வஞ்சம் மிக்க அரக்கியான
சூர்ப்பனைகையின் மூக்கையும் , ராவணனின் தலையையும் அறுத்தவனே!
நீ வெண்ணை தின்ற பொது புரியாமல் நான் அடித்துவிட்டேன் அதை மனதில் கொள்ளாமல் தெளிந்த நீரில் முளைத்த செங்கழுநீர்ப்பூவைச் சூட்டிக் கொள்ள இங்கே வருவாயாக
இறைவனுக்கு நிகரான அருளாளர் வேறு யாரும் இல்லை

No comments:
Post a Comment