கரைச்ச (கோதுமை )
தோசை :- By: Savithri Vasan
அரைச்ச தோசை ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் ஒரு
கரைச்ச தோசைக்கு ஈடாகுமா .......................குரல் ..999
ஆமாங்க இது நான் எழுதிய குறள்
அரிசியும் உளுந்தும் ஊறவைச்சு ஆட்டுக்கல்லில் (மிக்சி)
அரைத்து அள்ளிப்போட்ட உப்பும் அம்மாவின் கை பட்டு
கலந்த மாவும் அது தரும் சுவையை விட இது கொஞ்சம்
அதிகம் தான்.
தேவையானவை:
அரிசிமாவு
கோதுமை மாவு
பச்சை மிளகாய்
ஜீரகம்
கடுகு
2 கரண்டி அரிசி மாவு, 1 கரண்டி கோதுமை மாவு
2 பச்சை மிளகாய் நறுக்கி போட்டு , கொஞ்சம் ஜீரகம்
கசக்கி போட்டு ஒரு 10 நிமிஷம் மூடி வைங்க.
தோசை செய்யறத்துக்கு முன்னாடி கொஞ்சம்
கடுகு தாளித்து,
தோசைக்கல்லில் மாவை விட்டு தோசை வாக்க
ஆரமிச்சா நேரம் போவதே தெரியாது , நமக்கு
தோசை உள்ள போறதே தெரியாது.
அதுவும் நல்ல வக்கணம்(தொட்டுக்க) இருந்தா
அவ்ளவுதான் ......
எனக்கு பிடிச்ச சைடு டிஷ் மிளகாய்ப்பொடி , உங்களுக்கு ?
No comments:
Post a Comment