கலியும் கெடும் காண்மின்!
கலியும் கெடும் கண்டுகொள்ளுங்கள் என்று, தான் காணும் எதிர்காலக் காட்சியை இந்தப் பாசுரத்தில் வெளிப்படுத்துகிறார் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் திருவாய்மொழி இது.
""பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
நீங்கள் நீடூழி வாழ்க நீடூழி வாழ்க நீடூழி வாழ்க''
- என்று திருமால் அடியார் குழாமுக்கு மூன்று முறை வாழ்த்துப் பா பாடுகிறார் ஆழ்வார்.
""கடல் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானுடைய அடியார்கள் பூமியின் மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம். ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன. எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்துபோயிற்று. யமனுக்கு இந்த உலகத்தில் ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்''. இந்தப் பாசுரத்தில், கடல் வண்ணன் என்று தொடங்கி, உழிதரக் கண்டோம், வல்லுயிர்ச் சாபம் போயிற்று, நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை, கலியும் கெடும், கண்டு கொண்மின், பொலிக பொலிக பொலிக என்று பொருள் கொள்ளும் வண்ணம் பூர்வாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்.
No comments:
Post a Comment