வாரம் ஒருபாடல்
திருவொற்றியூர் தலம் குறித்து அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பதிகத்தில் ஒற்றியூரை அடையும் அன்பர்களின் வினைகள் தாமே சுருங்கும் என்றவாறு போற்றிப் பாடுகிறார். பெருமான் எவ்வளவு மகிமை பெற்றவரோ அவர் உறையும் பதி அவ்வளவு மகிமை பெற்றது என்பது எளிதில் விளங்கும்.
""படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர்,
சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர்,
உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே (9)''.
பூதப்படை கொண்டவரும், வேதத்தவரும், இனிய கீதத்தவரும், விரி சடையில் கங்கையின் வெள்ளத்தைத் தாங்கிக் கொண்டு திகழ்பவரும், சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றைக் கொண்டவரும், தோலை உடையாக உடுத்துவதில் உகப்பு மிக்கவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும் என்று பாடுகிறார் அப்பர்.

No comments:
Post a Comment