Sunday, September 30, 2012

நாலடியார் - (374/400)

நாலடியார் -  (374/400)

ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்கு
காணாம் இல்லாதார் கடுவனையர்; காணவே 
செக்கூர்ந்து கொண்டார்க்கும் செய்த பொருளுடையர்
அக்காரம் அன்னார் அவர்க்கு
பொருள்:- அன்பில்லாத உள்ளத்தையும், அழகிய நீல
மலரைப் போன்ற கண்களையும் உடைய விலைமகளிருக்கு,
அவரிடம் வருபவர் பொருள் இல்லாதவர்களாக இருந்தால், 
அவர் அழகு முதலிய எத்தனை சிறப்பானவர்களாக இருந்தாலும் 
நஞ்சை போன்று   வெறுக்கத்தக்கவர்களே. பலர் அறிய செக்கு ஆட்டிப் 
பிழைப்பவர்களே ஆனாலும், அவர் தேடிய பெருஞ்செல்வம் 
உடயவரானால், அவர் அந்த விலை மாதர்களுக்கு இனிக்கும் 
சர்க்கரை போன்றவர்கள்.

No comments:

Post a Comment