Friday, September 21, 2012

வடபாதிமங்கலம் !!!

வரதன் அருளும் வடபாதிமங்கலம்!





திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகில் உள்ளது புத்தகரம்.
காவிரியின் கடைமடைப் பகுதி என்றாலும் இவ்வூர், சோலைகள் சூழ்ந்த வளமான ஊர். இங்குதான் சுமார் 700 வருடங்களுக்கு முற்பட்ட வரதராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. சோழர்கள் உருவாக்கிய ஆலயம் இது. இக்கோயில் காலப்போக்கில் பழுதடைந்து, முட்புதர்களும், செடி கொடிகளும் வளர்ந்து கோயில் இருந்த இடத்தையே மூடி மறைத்துவிட்டன. பக்தர் ஒரு
வர் கனவில் தோன்றிய பெருமாள் தான் இருக்கும் இடத்தைக் கூறினார். அதன்படி முட்புதர்களைக் களைந்துவிட்டுப் பார்த்தபோது வரதனும், தேவியரும் வெளிப்பட்டனர்.

இதையடுத்து கிராம மக்கள் பாலாலயம் செய்து கோயிலுக்கான திருப்பணியைத் தொடங்கினர். பணம் இல்லாததால் திருப்பணி தடைபட்டது. இப்போது 20 வருடங்கள் கழித்து மீண்டும் திருப்பணி தொடங்கியுள்ளது.

இத்திருத்தலத்தில், பெருமாள், அபய வரத முத்திரைகளுடன் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் அருள்கிறார். ஸ்ரீதேவி - பூதேவி இருவரின் எழிற்கோலம் நெஞ்சை விட்டு அகலாது. இக்கோயிலில் உற்ஸவர் திருமேனிகள் இல்லை. ராமர் சந்நிதியை அமைப்பதற்கான திருப்பணிகளும் நடைபெறுகின்றன. இந்தக் கோயிலுக்கு மிக அருகில்தான் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது. இரண்டு கோயில்களுக்கும் பொதுவாக இருந்த சுற்றுச் சுவர் தற்போது தரைமட்டம் ஆகியுள்ளது. சுற்றுச் சுவர் கட்டப்பட வேண்டும் என்பதும் பக்தர்களின் விருப்பம்.

மேலும் தகவலுக்கு 98408 85261.

No comments:

Post a Comment