சோள மாவு அல்வா
சோளம் அப்டியே பச்சையா திங்கலாம், சுட்டும் சாப்பிடலாம்
மசாலா சேர்த்து கடற்கரை ஓரம் விக்கறத வாங்கி சாப்பிடலாம்
வீட்லயே அல்வா செஞ்சும் சாப்பிடலாம் ,
சோளம் சத்து நிறைந்த உணவு , எப்டி சாப்டா என்ன
அப்ப வாங்க அல்வா செஞ்சு சாப்பிடுவோம்
சோளமாவு 100 கிராம்
சர்க்கரை 200 கிராம்
பால் 1 லிட்டர்
முந்திரி 10
திராட்சை 10
ஏலக்காய் 5(பொடி செய்யவும்)
நெய் 2 கப்
கேசரி பௌடர் கொஞ்சம்
உப்பு சிட்டிகை அளவு
செய்து பழகுவோமா:
முந்திரி , திராட்சை நெய்ல வறுத்து வச்சிடுங்க
சோளமாவு(சிட்டிகை உப்பு சேருங்க) , சர்க்கரை , கொஞ்சம் கேசரி தூள் மூன்றும் ஒன்றாக பால் சேர்த்து கரைக்கவும் ,கட்டி இல்லாம பாத்துக்குங்க
இப்ப அடுப்புல ஏத்தி (சூடு கொஞ்சம் கம்மிய இருக்கட்டும்)நல்லா
அடிபிடிக்காமல் கிளருங்க கொஞ்சம் கெட்டியா வரும்போது
ஏலக்காய் பொடி போட்டு கொஞ்சம் கொஞ்சமா நெய் விட்டு கிளருங்க.
நெய் தேவைப்பட்டா இன்னும் கொஞ்சம் எடுத்துகோங்க
நெய் சேர சேர சுவை நல்லா இருக்கும். நல்லா சுழண்டு
வரும்போது , முந்திரி , திராட்சை சேர்த்திடுங்க அவ்ளவுதான்
சோள அல்வா தயார் .
ஆயிடுச்சா இப்ப அடுப்பில் இருந்து கீழே இறக்கி ......
என்ன பாக்கறீங்க எல்லாருக்கும் துண்டு போட்டு குடுங்க
இல்லன்னா அப்டியே கப்ல போட்டு குடுங்க , நீங்களும்
சாப்டுங்க , எனக்கும் கொஞ்சம் குடுங்க.
சோள அல்வா சாப்ட்டு சோளக் கொல்லை பொம்மை மாதிரி நிக்காதீங்க
சுறு சுறுப்பா இருங்க

No comments:
Post a Comment