நாலடியார் - (371/400)
விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாட்டின் வேறல்ல; -- விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே; அவரன்பும்
கையற்ற கண்ணே அரும்.
பொருள்:- விளக்கின் ஒளியும், விலை மாதரின் நட்பும்
கலக்கமேதும் இல்லாமல் ஆராய்ந்து பார்த்தால், அவை
இரண்டும் தம் இயல்பில் வேறுபட்டவை அல்ல. நெய்
தீர்ந்தவுடன், விளக்கின் ஒளி அணைந்து விடும். அதுபோல்,
விலை மாதரின் அன்பும், தம்மிடம் வருபவரிடம் பொருள்
இல்லை என்கிறபோது இல்லாமல் பொய் விடும்.
No comments:
Post a Comment