நாலடியார் - (370/400)
புதுப்புனலும், பூங்குழையார் நட்பும் இரண்டும்,
விதுப்புற நாடின், வேறல்ல; -- புதுப்புனலும்
மாரி அறவே அறுமே; அவரன்பும்
வாரி அறவே அறும்.
பொருள்:- மழைக் காலத்திலே பெருகி வருகின்ற புதிய
நீர்ப் பெருக்கமும், அழகான தோடு அணிந்த வேசியரின்
தொடர்பும் ஆகிய இந்த இரண்டும் பதட்டமின்றி அமைதியாக
ஆராய்ந்து பார்த்தால், ஒரே தன்மை உடையவையே அன்றி
வேறு அல்ல. மழை நின்றால், புது நீர்ப்பெருக்கமான புதிய
வெள்ளமும் நின்று போகும். அதுபோல், பொருள் வருவாய்
நின்று போனால் வேசியரின் நட்பும் நின்று போய்விடும்.

No comments:
Post a Comment