Monday, September 17, 2012

நாலடியார் - (362/400)

நாலடியார்  - (362/400)

வழுக்கெனைத்தும் இல்லாத வாள் வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம் பெறுவாராயின், இழுக்கெனைத்தும்
செயகுறாப்  பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.

பொருள்:- இயற்கையிலேயே கற்பொழுக்கம் இல்லாத
பெண்கள், சோர்வு சிறிதும் இல்லாத சிறந்த வாள்
வீரர்களின் பாதுகாவலிலே இருந்தபோதும், எப்படியேனும்
தம் ஒழுக்கத்தில் இருந்து தவறுவார்கள். ஆகையினால்
இனிதாகப் பேசும் அந்தப் பெண்கள் சிறு குற்றமேனும்
செய்யாத காலம் சிறிதே ஆகும்  அவர்கள் நல்லொழுக்கத்தை
கைக்கொள்ளாத காலமோ அதிகம்.

No comments:

Post a Comment