Wednesday, December 25, 2013

தினம் ஒரு திருப்புகழ் - அருள் பெற

தினம் ஒரு திருப்புகழ் -  அருள் பெற  - நாள் - 41



ராகம்: சஹானா   / சக்ரவாஹம்                தாளம்:  கண்டசாபு


அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.



கருத்துரை: பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி
அலையாமலும் நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும்
நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்)உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த* நல்ல குரு நாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே. 

 * முருகனிடமிருந்து ஜெபமாலையை பெற்ற நிகழ்ச்சி அருணகிரியார் வாழ்வில் நடைபெற்றது.

தொடரும் திருப்புகழ் ............................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment