Wednesday, May 29, 2013

மஹா பெரியவா 120 வது ஜெயந்தி விழா காட்சிகள்










ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

மஹா அனுஷஜயந்தி(120 வது) மஹோத்சவம்
நிறைவுக்காட்சிகள்

இடம் : சென்னை மேற்கு மாம்பலம் , ஸ்ரீ அயோத்ய அச்வமேத
மகா மண்டபம்




" தென்னாடுடைய பெரியவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஸர்வக்ஞா! ஸர்வவ்யாபி பெரியவா சரணம்
மாயபிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி"




மஞ்சள் குடமெடுத்து அபிஷேகித்தோம்
மங்களம் வாழ்வில் அனைவரும் பெற

மலர்கள் குடமெடுத்து அபிஷேகித்தோம்
மனங்கள் மகிழ்ச்சி பெற

சங்கில் நீரெடுத்து சங்கரனை அபிஷேகித்தோம்
சங்கடங்கள் தீர்ந்திடவே

பன்னீர் குடமெடுத்து அபிஷேகித்தோம்
நாட்டில் நன்னீர் பெற்று செழிக்கட்டும் என்று

பால் குடம் எடுத்து அபிஷேகித்தோம்
பாவங்கள் அகன்று புண்ணியம் கிடைத்திடவே

சந்தனக் குடமெடுத்து அபிஷேகித்தோம்
சஞ்சலங்கள் அகன்று சதா உன்னை நினைத்திடவே

பஞ்சாமிர்தக் குடமெடுத்து அபிஷேகித்தோம்
நெஞ்சார உனை நினைத்து மகிழ்ந்திடவே

புஷ்ப ரத்தத்தில் அமர்த்தி பவனிகண்டோம்
புவி எங்கும் செழுமை நிறைந்திடவே

தயிர்க் குடமெடுத்து அபிஷேகித்தோம்
உயிர் காக்கும் குருவே உன் அருள் வேண்டி 

திருநீறு குடமெடுத்து அபிஷேகித்தோம் 
இரு வேறு மனம் வேண்டா நிலை வேண்டி

அன்னப்பாவாடை கொண்டு அலங்கரித்தோம்
என்னும் எண்ணங்கள் தின்னமாகிடவே

1008 இளநீரில் நீராட்டி மகிழ்ந்தோம்
அவ்வமயமே அனைவரும் அதை பருகி மகிழ்ந்தோம்

குங்குமக் குடமெடுத்து அபிஷேகித்தோம்
நின் சிவந்த மேனியை காமாட்சியாய் கண்டு மகிழ்ந்தோம்

நிறைவான நாள் இன்று 1008 வடை மாலை
1008 ஜாங்கிரியும் ஜடை போல பின்னி பார்த்து மகிழ்ந்தோம்


ஒய்யார ஊஞ்சலில் நீயாடக்கண்டு , மெய்யுருகி நின்றோம்
பொய் புகலேன் சத்தியம் சர்வேஸ்வரா நின் ஜெயந்தி விழா
நாங்கள் மெய் சிலிர்த்து உணர்ந்த விழா 

No comments:

Post a Comment