Sunday, March 24, 2013

கேட்டவரம்பாளையம் பஜனை


107 வருட பாரம்பரிய மிக்க கேட்டவரம்பாளையம் பஜனை!கேட்டவரம்பாளையம் என்றவுடன் கிராமத்தினரின் பஜனைச் சிறப்புதான் உடனடியாக நினைவுக்கு வரும் என்று காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் அவர்கள் கூறி இருக்கிறார்கள். கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததி பெரும் பெருமை வாயந்தது என்பதையும், இந்தியா முழுவதும் வாழ்கின்ற பல பகுதிகளைச் சார்ந்த மக்கள் அந்தப் பஜனையில் எத்தனைய ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு அவர்களின் மேலேயுள்ள வாகங்கள் குறிப்பாகச் சுட்டுடக் காட்டுகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் வீரளூர்செல்லும் பாதையில் கேட்டவரம்பாளையம் என்ற அழகிய கிராமம் உள்ளது.அங்கு ஆந்தணர்கள் வாழும் அக்கிரகார வீதியில் ஸ்ரீராம பஜனை மந்திரம் இருக்கிறது. 1907 ஆம்ஆண்டில் அந்த பஜவை மந்திரம் ஓர் எளிய அளவில் தொடங்கப் பெற்றது. ஸ்ரீராமர் திருவுருப்படம் ஒரு சிறிய அமைப்பில் எழுந்தருளச் செய்யப் பெற்றது. . ஸ்ரீராமர் திருவுருப்படம் ஒரு சிறிய அமைப்பில் எழுந்தருளச் செய்யப் பெற்றது. தாம்ஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஸ்ரீஜானகிராம தீக்ஷிதர் அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தினசரி பஜைகளையும் இதர சமயச் சடங்குகளையும் அங்கு செய்து வந்தார்.
அந்த இடத்தை அவரே சுத்தம் செய்து அலங்கரித்து ஸ்ரீராம நாம பஜனைப் பாடல்களைப் பாடுவார் என்று கூறப்படுகி. பெரியவர்கள் ஸ்ரீசெங்கல்ராயர் அவர்களது முயற்சி தற்போது அந்த பஜனை மந்திரத்தில் கம்பீரமாக அமர்ந்து உள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவுருவப்பாடும் அமைக்கப் பெற்றது . நாளாவட்டத்தில் அங்கு முறையான பஜனை நடைபெறுவதற்கு அந்தக் கிராமத்தின் சில பெரியவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். அவர்களில் ஒழுக்கை ஸ்ரீராமஸ்வாமி ஐயர் ஒருவர் .
ஆரம்பக் கட்டத்தில் ,ஸ்ரீராமநவமி உற்சவம் அக்கிரகாரவீதியில் உள்ள ஒவ்வொரு இல்லத்தின் நிகழ்ச்சியாக ஒவ்வொரு நாள் நடத்தப்பட்டது. பிறகு கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததி என்று தெளிவாக உருவாக்கப்பட்டது மணியம் வேங்கடரமண அய்யர் ராமஸ்வாமி திக்ஷிதர் ராமநாத ஐயர் ரங்கநாத ஐயர், ராமசேஷ ஐயர், ரங்க ஐயங்கார், சீனு ஐயங்கார் நாராயண ஐயங்கார் சௌந்திரராஜ ஐயங்கார் கே.ஆர் சதாசிவ அய்யர் முதலிய பெருமக்கள் இந்தத் தனித்துவம் வாய்ந்த கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததியை உருவாக்கியவர்கள் இந்தப் பத்ததி இன்று வரை கவனமாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராம நவமி உற்சவம் பத்துத் தினங்கள் இங்கு நடைபெறுகின்றன. அந்தப் பத்து நாட்களிலும் அங்கு வருகின்ற பாகவாதர்கள் பக்தர்கள் அனைவருக்கும் அருமையான உணவு வழங்கப்படுவதும் அவர்கள் தங்குவதற்கு உரிய வசதி அன்புடன் அளிக்கப்படுவதும் அந்தக் கிராம மக்களின் சிறப்பு இயல்புகளின் விளைவுகள்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்ரவதி சங்கராசாரிய சுவாமிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீடீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய மஹா மஹனீயர்கள் கேட்டவரம்பாளையம் கிராமத்துக்கு எழுத்தருளி அதனை மேலும் புனிதப்படுத்தி இருக்கிறார்கள். ஸ்ரீஅச்சுததாசர் ஸ்ரீ அம்முர் சுவாமிகள் ஆகிய அருளாளர்களும் அங்கு விஜயம் செய்திருக்கிறார்கள் ஸ்ரீஅம்மூர் சுவாமிகள்அங்கு ஸ்ரீராமநவமி உற்சாகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடஜன் பங்கு கொண்டவர். கேட்டவரம் பாளையம் கிராமத்துக்கு அருகில் சிறப்புமிக்க பர்வதமலை கம்பீரளமாகக் காட்சி தருகிறது மூலிகைகளக் அடர்ப்த அப்தப் புனித மலையில் பல சித்த பருஷர்களும் ஞானிகளும் இப்போதும் வாழ்கிறார்கள். கேட்டவரம்பாளையம்யத்திற்கு அருகில் சாலமேடு என்ற சிற்றூரில் ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயார் சமேத ஸ்ரீபிரசன்ன வே÷ஞூகடடேசப் பெருமாள் கோயில் ஓர் அழகிய சிறிய மலை மீது உள்ளது. அது பொதுவாக மலைக்கோயில் என்று அழைக்கப்படுகிறது அங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாள் கேட்ட வரவும் அளிக்கக் கூடியவர் அங்கு சென்று வழிபடுவதற்கு வெகு தொலைவில் இருந்தும் மக்கள் திரளாக வருகிறார்கள்
கேட்டவரம்பாளையம் கிராமத்தில் இரண்டு அமைதியான ஆலயங்கள் உள்ளன. ஒன்று ஸ்ரீகாசி விசுவநாதர் கோயில் ; மற்றொன்று ஸ்ரீ பெருமாள் கோயில். இரண்டும் புனிதம் வாய்ந்தவை; வந்து வழிபடுவோருக்கு அருள் திருபவை திருவண்ணாமலை வேலூர் ஆகிய இரு மாவட்டங்களின்சமயப்பெருமைக்கு ஒளி மிகுந்த ஒரு திலகமாக கேட்டவரம்பாளையம் கிராமமும் கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததியும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கேட்டவரம்பாளையம் ஸ்ரீராம பஜனை மந்திரத்தின் சார்பில் ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம் வருகிற 19.4.2013 முதல் 28.4.2013 வரை நடைபெறுகிறது. இதில் 26.4.13 சீதா கல்யாணமும், 27.4.13 ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும், 28.4.13 ஹனுமத் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.
தொடர்புக்கு:

ஸ்ரீராம பஜனை மந்திரம் டிரஸ்ட்,

கேட்டவரம்பாளையம், லக்ஷிமி சுதரா, 36, 3வது தெரு, அபிராமபுரம், சென்னை-18, போன்- 044 4553 4041