Wednesday, March 20, 2013

புளி இஞ்சி (வருடாந்திர இஞ்சி)



புளி இஞ்சி (வருடாந்திர இஞ்சி) 

By:(Late) S.K.Lakshmi (My beloved Mother)


இஞ்சி லாபம் மஞ்சளிலே என்பார்கள்
ஆனா எனக்கு ஒரு நல்ல ஊறுகாயிலே 







எஞ்சி இருந்த இஞ்சிய என்ன பண்றதுன்னு தெரியாம
அக்கம் பக்கம் இருக்கறவங்ககிட்ட கெஞ்சி கெஞ்சி பார்த்து
கொஞ்சமும் மசியல யாரும் வேணும்னா ஒரு துண்டு
இன்னைக்கு பொங்கலுக்கு எடுத்துக்கறேன், நான் கொஞ்சம்
பச்சடி பண்ண எடுத்துக்கறேன், நான் கொஞ்சம் கஷாயம்
போட எடுத்துக்கறேன் அப்டின்னு ஆளுக்கு ஒரு துண்டு
எடுத்துண்டி மிஞ்சிபோச்சு அப்பாவும் கணிசமான அளவு

மிஞ்சி போச்சு

அம்மா சொன்ன பக்குவம் எங்கன்னு தேடி கண்டு
புடிச்சு செஞ்சேன் , சுவையான புளி இஞ்சி

புளி இஞ்சி

தேவை :

இஞ்சி 1/2 கிலோ
வெல்லம் : 100 கிராம்
புளி : எலுமிச்சை அளவு
கடுகு 2 டீஸ்பூன்
வெந்தயம் 2 டீஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப

இஞ்சியை நன்றாக தண்ணீர்விட்டு சுத்தம் செய்து
தோல் சீவி , சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் .
மீண்டும் ஒருமுறை தண்ணீரில் சுத்தம் செய்து
நீர் வடிகட்டி வைக்கவும் .

புளியை நீர்விட்டு நண்டாக கெட்டியாக
கரைத்து வைத்துக்கொள்ளவும்

மிதமான சூட்டில் அடுப்பில் , வாணலியில் 1 கரண்டி
(குழம்பு கரண்டி ) நல்லெண்ணெய் விட்டு, பெருங்காயம்
கடுகு தாளித்து , பிறகு சிறுதுண்டுகளாக நறுக்கிவைத்த
இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.






சிறிது நன்றாக வதக்கியவுடன் அதனுடன் புளி
கரைசல் சேர்த்து , வெல்லம் , உப்பு சேர்த்து நன்றாக
கொதிக்கவிடவும். புளி தண்ணீர் கெட்டியாகி
என்னை மேலே வரும் பதத்தில் அடுப்பில் இருந்து
இறக்கிவிடவும் . இதன் மேல் வெந்தயம் வறுத்து
பொடி செய்து போட்டு நன்றாக கிளறிவிடவும் .

சூடு ஆறியதும் சுவைத்து பார்க்கவும்
பிறகு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து
பத்திரப்படுத்தி வைக்கவும். 





குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தவும்
எடுத்து உபயோகப்படுத்தும் பொழுது நன்றாக் கிளறிவிட்டு
எடுத்து உபயோகிக்கவும்.

உபயோகிக்கும் காலம்:- குறைந்தது 6 மாத காலம்
வரை கெட்டு போகாமல் இருக்கும்.


No comments:

Post a Comment