Thursday, January 3, 2013

ஒழுக்கம்



தினசரி தியானம்



ஒழுக்கம்

இறைவா, நின்னை நான் நினைந்திருக்கும் வேளையில் நிழல் போன்று ஒழுக்கம் என்னைப் பின் தொடர்கிறது. நின்னை மறந்திருக்கும் வேளையில் ஒழுக்கத்தின் நிழல் போன்று அதை நான் பின்பற்றுகிறேன்.


அவரவர் மனபரிபாகத்துக்கு ஏற்றவாறு ஒழுக்கம் உயர்ந்தது அல்லது தாழ்ந்தது ஆகிறது. ஒருவருக்கும் தெரியாது இரகசியமான இடத்துக்குப் போய்த் தீயில் கை வைத்தால் அது சுடாதிருக்குமா? ஒருவருக்கும் தெரியாது மறைவில் ஒழுக்கம் தவறினால் அது மனிதனைக் கீழ்மைப் படுத்தாது விட்டுவிடுமா? அழகு பார்க்க யாரும் இல்லாத இடத்திலும் மலரானது தன் முழு அழகையும் தோற்றுவிக்கிறது. மணத்தை மோப்ப யாரும் இல்லாத கானகத்திலும் மலரானது தன் முழு மணத்தையும் பரப்புகிறது. மனமே நீ இறவனுக்குரிய மலர் ஆவதே உனக்குற்ற ஒழுக்கம்.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
-திருக்குறள்

No comments:

Post a Comment