Saturday, January 5, 2013
தன்னைத் திருத்துதல்
தினசரி தியானம்
தன்னைத் திருத்துதல்
இறைவா, உனது சிருஷ்டியில் குறைபாடு காண்கிற நான், என் மனத்தகத்து உள்ள கேட்டைத் திருத்தியமைக்க நினைப்பதில்லை. என்னே! என்னை நான் ஒழுங்குபடுத்தும் இயல்பைத் தந்தருள்க.
பதைபதைப்பே வடிவெடுத்தவன் மற்றவர்களைச் சீர்படுத்துவதில் கண்ணுங்கருத்துமாயிருக்கிறான். அறிஞன் தன்னைத் திருத்துதலில் கவனத்தைச் செலுத்துகிறான். தன்னைத் திருத்துமளவு உலகம் திருந்தியாக ஒருவனுக்குக் காட்சி கொடுக்கிறது. புறக்கரணங்களை நேர்மைப்படுத்தினால் மட்டும் போதாது; மனத்தின்கண் எழும் வீணான எண்ணங்களையும் சுயநலத்தையும் அகற்ற வேண்டும். மனமே, உன்னை நீ நேர்மைப்படுத்திக்கொள்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்.
-பத்ரகிரியார்
Labels:
தினசரி தியானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment