Thursday, January 3, 2013

சுயேச்சையின் பாகுபாடு

தினசரி தியானம்சுயேச்சையின் பாகுபாடு

என்னுயிர் நாயகா, உன்னை நான் நாடுகையில் எனது சுயேச்சை கற்புடையதாகிறது. உன்னையல்லாது வேறு பொருளை நாடுகையில் அது கற்பிழந்து விடுகிறது.


கீழ்மையில் செல்லும் சுயேச்சை விலங்குத் தன்மையது. இடைநிலையில் திரியும் சுயேச்சை மக்கள் - தன்மையது. மேன்மையில் மிளிரும் சுயேச்சை தெய்வத் தன்மையது. நெஞ்சே, நீ நாடுவது பெரிய பொருளானால் உனக்கு உண்மையான சுயேச்சை வந்து விட்டதென்று தெரிந்து கொள்.


உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி.
-அப்பர்