தினசரி தியானம்
அபயம்
அபயகரங் காட்டி என்னை வாவென்று அழைத்த வண்ணமாயிருக்கும் இறைவா, நான் விரைவில் உன் சந்நிதி வந்து சார்வேனாக.
தீக்கு அருகில் வருகிறவர்களுக்குக் குளிர் போகிறது. உணவை ஏற்பவர்களுக்குப் பசி போகிஅது கடவுளை அடைபவர்க்குப் பயம் போகிறது. கடவுளில் ஒன்றித்துவிடுபவர்க்கு ஆபத்து ஒன்றுமேயில்லை. கடவுளை அடைவதும் அபயத்தில் நிலைபெறுவதும் ஒன்றேயாம்.
இக்காயம் பொய்யென்றோர் ஈட்டத்து உனக்கபயம்
புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment