Monday, December 17, 2012
பொய்மான்
தினசரி தியானம்
பொய்மான்
பிரபஞ்ச வாழ்வு என்னும் பொய் மானைப் பார்த்தோடாதிருக்குமாறு பரம்பொருளே, நீ அருள்புரிவாயாக.
தவத்துக்காகக் காட்டுக்குச் சென்றிருந்த ஸ்ரீராமனும் சீதையும் சிறிது நேரம் பொய் மானுக்கு ஆசைப்பட்டார்கள். அந்த ஆசைக்கு இடங்கொடுத்ததால் அவர்கள் பெருந்துயரத்துக்கு ஆளானார்கள். மக்கள் எல்லாரும் படும் துயரத்துக்கு மூலகாரணம் பொறி வழியே அவர்கள் பிரபஞ்சப் பொருள்கள் என்னும் பொய் மானை நாடிச் செல்வதாம். அதைப் புறக்கணிக்குமளவு துன்பம் தவிர்க்கப்படும்.
இகமுழுதும் பொய்யெனவே
ஏய்த்துணர்ந்தால், ஆங்கே
மிகவளர வந்த அருள்
மெய்யே - அகநெகிழப்
பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தைச்
சேரீர்; அதுவே திறம்.
-தாயுமானவர்
Labels:
தினசரி தியானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment