Sunday, October 28, 2012

ஞானம்



தினசரி தியானம்



ஞானம்



ஆதிபகவன் எனும் சிவசக்தியினிடத்திருந்தே உலகனைத்தும் உருவெடுத்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்வேனாக.


ஜடப்பொருள்களுள் வேற்றுமை காண்பதும் ஜீவர்களுக்கிடையில் வேற்றுமை காண்பதும் அக்ஞானம். அவை யாவும் ஒரே மூலப் பொருளிடத்திருந்து தோற்றத்துக்கு வந்துள்ளன. ஒரு பொருளே பலவாய்த் தோன்றிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது ஞானம்.


ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கசுவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.
-திருமந்திரம்

No comments:

Post a Comment