தினசரி தியானம்
உள்ளக் கொதிப்பு
உள்ளக் கொதிப்பு ஒடுங்கினாலொழிய ஆனந்தமான பரத்தை அதனூடு காணமுடியாது என்பதை நான் அறிந்து கொள்வேனாக.
பொருந்தியவைகளும் பொருந்தாதவைகளுமாகிய எண்ணிறந்த விருத்திகள் மனத்தினுள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. அவைகளை ஓய்ந்திருக்கப் பண்ணவேண்டும். தோன்றத் தோன்ற அவைகளை ஒதுக்கி வைக்கவும் வேண்டும். திரையற்ற கடல் போன்று மனம் ஆய்விட்டால் அது உபரதியாகும்.
வாதனைவிட் டுன்னருளின்
மன்னினல்லால் வேறுமொரு
சாதனைதான் உண்டோ நீ
சாற்றாய் பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment