Monday, October 15, 2012

நாலடியார் - (390/400)



நாலடியார் - (390/400)


'அரும்பவிழ் தாரினான் எமஅருளும்' என்று
பெரும்பொய் உரையாதி; பாண! -- கரும்பின்
இக்கண் அனையம்யாம் ஊரார்க்கு; அதனால்,
இடைக்கண் அனையார்க்கு உரை.


பொருள்:- பாணனே! அரும்புகள் மலரும்படியான மாலையை
அணிந்த என் தலைவன்(நாயகன்) எனக்கு அருள் செய்ய வருகின்றான்
என்று பெரிய பொய்களை என்னடத்தில் வந்து கூற வேண்டாம்.
ஏனென்றால், ஊரனுக்கு இப்போது நான் கரும்பின் கடைசி நுனி போன்று சுவை இல்லாதவளாக இருகின்றேன். அதனால், இந்தப் பேச்சை, அந்தக் கரும்பின் இடையிலுள்ள கணுக்களைப் போன்று இப்பொது அவருக்கு இனிக்கும் விலை மகளிரிடம் சொல்வாயாக!

No comments:

Post a Comment