Tuesday, October 2, 2012

நாலடியார் - (377/400)



நாலடியார் - (377/400)


ஆமாபோல் நக்கி, அவர்கைப் பொருள் கொண்டு,
சோமாபோல் குப்புறூம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென் றிருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.


பொருள்:- காட்டுப் பசுவைப்போல் முதலில் நக்கி
இன்பம் உண்டாக் நேசித்து, தம்மிடம் கூடியவர்களின்
கைப்பொருள்களைப் பறித்துக் கொண்டு, பின் காட்டு
எருதைப்போல் கவிழ்ந்து படுத்துக் கொள்கிற தீய
ஒழுக்கம் உடைய பொது மகளீர் (வேசியர்) இடத்தில்
உள்ள போலி அன்பிணை நம்பி இருந்தவர்கள், அவளால்
கைவிடப்பட்ட காலத்தில் பலராலும் எள்ளி நகைத்தலுக்கு
ஆளாவார்கள்.

No comments:

Post a Comment