Friday, September 14, 2012

சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sweet Potato) கறி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sweet Potato) கறி  By:- Savithri Vasan

சந்தைக்கு வர தொடங்கியது சர்ர்க்கரை வள்ளிக்கிழங்கு
இனி சங்கராந்தி வரை தடையின்றி கிடைக்கும் .

இதில் செய்யத்தக்க வகைகள்

சர்க்கரை வள்ளிகிழங்கு சாம்பார்
சர்க்கரை  வள்ளிகிழங்கு  வெத்தக்குழம்பு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு கறி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு துகையல்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சுட்டு சாப்பிடுதல்
சர்ர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து வெல்லம் போட்டு சாப்பிடுதல்

என்னங்க இப்டி வரிக்கு வரி சர்க்கரை வள்ளிக்கிழங்கு அப்டின்னு சொல்லறேன்னு பாக்கறீங்களா , அதன் பயன்பாடு , சுவை , மருத்துவ குணம்
அப்படி பேசவைக்கின்றது.

சரி சர்க்கரை வள்ளிகிழங்கு கறி  செய்வது ரொம்ப சுலபம்
அது எப்டின்னு பார்க்கலாம்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வாங்கி துண்டு துண்டா நறுக்குங்க
கொஞ்சம் உப்பு போட்டு வேக வைங்க , வெந்ததும்




வெந்ததும் ஒண்ணும்  வேலையே இல்லை வேணும்னா  அப்டியே
திங்கலாம் , காய் பண்ணனும்னா



காய் செஞ்சு சாப்பிடணும்ணா , நான் சொல்லற மாதிரி செய்யுங்க

அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் கொஞ்சம் எண்ணை  விட்டு
கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து ,  நல்லா வதக்குங்க (5 நிமிஷம் போதும்). கருவேப்பிலை போடுங்க .

வேணும்ணா  கொஞ்சம் தேங்காய் துருவல் போடுங்க .

சர்க்கரை வள்ளிகிழங்கு காய் தயார்



சர்க்கரை வள்ளிக்கிழங்கு எந்த சமையல் ஆனாலும் சந்தோஷமும்
சுவையும் அதிகம்தான் 

No comments:

Post a Comment