சிறிய வாய்க்காலைத் தாண்டுவது போல, பிறவிப்பெருங்கடலைத் தாண்டியவர் ஆதிசங்கரர். அவர் பாடிய பஜகோவிந்தத்தை ஞானம் வழங்கும் அணையா தீபம் என்று அறிஞர்கள் போற்றுவர். வாழ்வில் கிடைக்கும் தற்காலிக இன்பங்கள் என்னும் மயக்கம் நம்மை விட்டு நீங்க மறுக்கிறது அம்மயக்கம் தீர்க்கும் மாமருந்தாக பஜகோவிந்தம் விளங்குகிறது. மனதில் ஏற்படும் தீய ஆசைகளை உடைக்கும் சம்மட்டியாக விளங்குவதால் இதற்கு, மோகமுத்கரம் என்ற சிறப்புப்பெயர் உண்டு.
முத்கரம் என்றால் சம்மட்டி. இதில் 31 பாடல்கள் உள்ளன. காலன் நம் உயிரை பறிக்க வரும்போது நாம் கற்ற கல்வியும், தேடிய செல்வமும் உதவிக்கு வராது. கோவிந்தநாமம் ஒன்றே உற்ற துணை, என்று பஜகோவிந்தத்தின் முதல்பாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment