தினசரி தியானம்
மாணிக்கம்
உலகம் நல்குகிற இன்ப துன்பங்களுக்கிடையில் இறைவா, உன்மீது கொண்டுள்ள பேரன்பை நான் என்றும் மாற்றாது வைத்திருப்பேனாக.
குப்பையில் கிடக்கும்போதும், பொன் பெட்டகத்தில் வைத்திருக்கும்போதும் மாணிக்கம் மாணிக்கமே. அன்பு, ஆனந்தம், அமைதி, பொறுமை, இரக்கம் ஆகிய நற்குணங்கள் வாய்க்கப்பெற்ற சான்றோன் எல்லா நிலைகளிலும் சான்றோனாக இருக்கிறான். தன்னைப் போற்றுபவனிடத்தும் தூற்றுபவனிடத்தும் அவன் சான்றோனாயிருக்கிறான்.
மாணிக்கத் துள்ளொளிபோல் மருவி யிருந்தாண்டி
பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன்காண்.
-பட்டினத்தார்
No comments:
Post a Comment