Friday, September 7, 2012

வருஷாபிஷேகம்



பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் நாளை வருஷாபிஷேகம்!



           
கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (8ம் தேதி) நடக்கிறது. விழாவில் மழைவேண்டி 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.அருணகிரிநாதரால் பாடல்பெற்று புகழ்பெற்று விளங்கும் திருமலைக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 8 ஆண்டுகளாக வருஷாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (8ம் தேதி) நடக்கிறது. இக்கோயிலில் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.


இதனையடுத்து வருஷாபிஷேக தினத்தன்று சுவாமியை தரிசிப்பதற்காக பக்தர்களுக்கு திருமலைக்கோயில் அடிவாரம் முதல் மலைக்கோயில் வரை சென்றுவர இலவசமாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. 

காலை 7 மணிக்கு மங்கள இசை நாதஸ்வரத்துடன் விழா துவங்குகிறது. 8 மணிக்கு மேல் யாகசாலை பூஜை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம், ஜடாக்ஜத ஹோமம், தொடர்ந்து மழைவேண்டி 108 சங்காபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை, 12 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மதியம் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம், 2 மணிக்கு சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு ஈரோடு ராஜாமணி பாகதவரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி மலை மீது உலா வருதலும், அதனை தொடர்ந்து வாணவேடிக்கையும் நடக்கிறது. 8.30 மணிக்கு பைரவர் பூஜை, தீபாராதனை நடக்கிறது.

கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தை சிறப்பாக கொண்டாடுவதே 
வருஷாபிஷேக சிறப்பாகும் 

No comments:

Post a Comment