குனுக்கு - By:- Savithri Vasan
துணுக்கு தெரியும் , படிச்சிருப்போம் , கேட்டு ரசிச்சிருபோம்
அது என்ன குனுக்கு ?
சுவைத்து ரசிக்கிரதுது தான் குனுக்கு .
இது ஒரு மாலை நேர நொறுக்கு தீனி , மழைக்கால புத்துணர்ச்சி
டிபன்.
பொதுவா இதுக்கு சைடு டிஷ் எதுவும் தேவை இருக்காது
சரி இந்த துணுக்கு செய்திகள் போதும் , இப்ப குனுக்கு
எப்டி செய்யறதுன்னு பார்ப்போம்.
தேவையானவை:-
அரிசி 2 ஆழாக்கு
துவரம் பருப்பு 1 ஆழாக்கு
கடலை பருப்பு 1 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு கொஞ்சம்
தேங்காய் கொஞ்சம்
வேர்கடலை ( விருப்பம் இருந்தால்)
எல்லாம் மொத்தமா போட்டு 1 மணிநேரம் ஊறட்டும்
பச்சை மிளகாய் 5
வெத்தமிளகாய் 7
பெருங்காயம் சிறிது
உப்பு :- தேவைக்கேற்ப
கருவேப்பிலை கொஞ்சம்
மிக்சில பெருங்காயம், பச்சை மிளகா, வெத்த மிளகாய் உப்பு
போட்டு முதல்ல அறைசிடுங்க , அப்புறம் ஊற வச்ச பருப்ப
அரிசி போட்டு கொஞ்சம் கொர கொரன்னு அரைச்சுக்குங்க
இதுல கொஞ்சம் வெங்காயம் பொடி பொடியா நறுக்கி போடுங்க
கருவேப்பிலை கிள்ளி போடுங்க.
அப்புறம் என்ன 'ஆல்மோஸ்ட்', குனுக்கு தயார் ஆனமாதிரிதான்
அடுப்புல மிதமான சூட்டல, வாணலியில் எண்ணை வச்சு
அரைச்ச மாவ சின்ன சின்னதா "கிள்ளி" போடுங்க , சிவந்து
வரும்போது ஒரு பாத்திரத்தில் (டிஷு பேப்பர் போட்டு)
குனுக்கு எடுத்து போடுங்க (முதல் ஈடு செஞ்சதும் கொஞ்சம்
சுவை பாருங்க , குறை இருந்த சரி பண்ணுங்க)
சுவை ஒகே அப்டின்ன புல்லா செஞ்சு முடிங்க ,
விடுவாங்களா
வீட்ல, பிள்ளைங்க , அம்மா எனக்குன்னு ஆளாளுக்கு
ஒரு கப் எடுத்துண்டு வருவாங்க.
குழந்தைங்க சந்தோஷமா சாப்பிடற ஒரு நல்ல ஐட்டம்
இது.
இது மீந்து போன அடை மாவுல கூட செய்யலாம்னு
சொல்லறாங்க , எங்க வீட்ல அடைக்கே மாவு பத்தாது
அப்புறம் இதுக்கு எங்க? நோ சான்ஸ் .
நாங்க எப்பவுமே பிரெஷ் பிரிபரேஷன் தான் .
"துணுக்கை" படிச்சு ரசிக்கும்போது கொஞ்சம் "குனுக்க"யும்
ரசிச்சு சுவைங்க

No comments:
Post a Comment