தினசரி தியானம்
நிராசை
ஆசையற்றிருப்பதே ஈசா, உன்னை ஏத்துதற்கான நல்ல நிலையாகிறது.
பிறவியைப் பெருக்குவது ஆசை. பிரபஞ்ச வாழ்வில் அல்லல்களை உண்டுபண்ணுவது ஆசை. சாந்தியைக் கலைப்பது ஆசை. ஆனந்தத்தை மறைப்பது ஆசை. நிராசையோ மனிதனை தெய்வ சன்னிதியில் சேர்த்துவிடுகிறது.
ஆசையெனும் பெருங்காற்று டிலவம் பஞ்செனவும் மன தலியுங்காலம்
மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முக்திக்கான
நேசமும் நல்வாசமும் போய்ப் புலனாயிற் கொடுமைபற்றி நிற்பர் அந்தோ
தேசுபழுத்தருள் பழுத்த பராபரமே நிராசையின்றேல் தெய்வ முண்டோ.
-தாயுமானவர்
No comments:
Post a Comment