Friday, September 14, 2012

நாலடியார்

நாலடியார்  -  (359/400)


'இன்று ஆதும்; இந்நிலையே ஆதும்; இனிச்சிறிது
நின்று ஆதும்' என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்து, தம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

பொருள்:- 'இன்றைக்கு செல்வந்தர் ஆவோம்,
இப்போதே ஆவோம், இன்னும் சிறிது நேரத்தில்
ஆவோம்' என்று என்னிக்கொண்டிருந்து, அதிலேயே
மனம் ஆழ்ந்து, வெறும் வாய்ச் சொல்லால் மட்டும்
மகிழ்ந்து செயலில் அதற்க்கு உரியவற்றை செய்யாமல்
இறுதியில் செல்வம் பெறாததால் தன்  உள்ளம், மாறுபட்டு
தாமரை இலைபோல், யாருக்கும் பயன்படாமல் தாம்
இருந் நிலையிலேயே இறந்து போனவர்கள் பலர் ஆவர்.

No comments:

Post a Comment