Sunday, September 2, 2012

கொழக்கட்டை வேணுமா

அப்பனே, அப்பனே, "பிள்ளையார் அப்பனே" கொழக்கட்டை வேணுமா

வரும்   செப்டம்பர் 19 ம் தேதி பிள்ளையார் சதுர்த்தி
கொண்டாடப்போறோம்  அதுக்கு முக்கியமா கொழக்கட்டை
செய்யணும் அப்டின்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும் அனா


சிலபேருக்கு  சொப்பு  பண்றது கொஞ்சம் கஷ்டமா தெரியும்
அதுனால யோசிப்பாங்க .

கவலைய விடுங்க , கவனமா நான் போடற படத்த பாத்து
பக்குவமா மாவுபன்னி , பூரணம் செஞ்சு , பதமான கொழக்கட்டை
பிரமாதமா பண்றது எப்டின்னு தெரிஞ்சுக்குவோம் , அதவிட
நமக்கு  வேற என்ன வேலை.


                                         அரிசிய அளந்து எடுத்துகோங்க
                                         அரிசிய கலைஞ்சு ஊறவையுங்க
                                   ஒரு துணிய போட்டு காத்தாட உலர்த்துங்க
                        காஞ்சதும் கொஞ்சம் ஈரப்பதத்தோட மிக்சில அரைங்க
                                     அரைச்ச மாவை சல்லடையில் சலிங்க
                             சலிச்ச மாவை திரும்பவும் காத்தாட உலர்த்துங்க
                            தேங்காய் துருவல் தயார் பண்ணி வச்சுகோங்க
                                          தேவையான வெல்லம்  சேர்க்கவும்
                    அடுப்புல வாணலி அதுல தேங்காய்  வெல்லம்  போடுங்க
                                      நல்லா கிளறி பூரணம் தயார் பண்ணுங்க
                                             இப்ப பூரணம் ரெடி குழக்கட்டை செய்ய
                                   அதேமாதிரி உளுத்தம் பூரணம் தயார் செய்யவும்
              உளுத்தம் பருப்பு ஊறவச்சு ஒன்னு ரெண்டா மிக்சில அரைக்கவும்
       இப்ப சொப்பு  பண்ண மாவு ரெடி பண்ணுங்க , எப்டி பண்றது
சலிச்ச மாவ , அடுப்பில ஒரு கனமான பாத்திரம் வச்சு அதுல தண்ணி
விட்டு நல்ல கொதிக்க வச்சு அதுல இந்த மாவ போட்டு நல்லா கிளருங்க
(சிலர் பால் சேர்ப்பாங்க , அது உங்க இஷ்டம்)
 உளுத்தம் பூரண மாவை ஆவில வெச்சு எடுங்க
 இப்ப சொப்பு  பண்ண மாவ சின்ன, சின்ன  உருண்டையா பண்ணுங்க
 சொப்பு தயார் பண்ணுங்க , கொஞ்சம் கவனமா செய்யணும் ஒன்னும்
கஷ்டமே இல்ல, சின்ன சின்னதா உருட்டின ஒரு உருண்டைய கைல
கொஞ்சம் என்னை தடவிண்டு , கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால
கொஞ்சம் கொஞ்சமா அமுக்கி மெல்லிசா செஞ்சு அப்புறம் அத உள்ளங்கைல
வச்சு எண்ணை  தொட்டு தொட்டு படத்ல இருக்காப்ல பெரிசா பண்ணுங்க
சரியா வரும் , முதல்ல ரெண்டு மூணு சொப்பு  சரியா வராது , கவலைப்படாதீங்க ,
                                        அதுல வெல்ல பூரணம் நிரப்புங்க
                இந்த மாதிரி மூடி முழு கொழக்கட்டைய தயார் பண்ணுங்க

 உளுத்தம் பூரணத்துக்கு , கடுகு தாளித்து , உப்பு சேர்த்து
 எலுமிச்சை சாறு பிழிஞ்சு தயார் பண்ணுங்க
 அதே மாதிரி சொப்பு  பண்ணி அதுல பூரணம் நிரப்புங்க
 இப்ப இட்லி தட்துல வச்சு ஆவில வச்சு எடுங்க
என்னங்க இப்ப நம்ம வீட்லயும் பிள்ளையாருக்கு பிடித்தமான
கொழக்கட்டை ரெடிதானே (ஏன் நமக்கும் ரொம்ப பிடிக்குமே)

 இதுதாங்க செஞ்சு முடிச்ச வெல்ல  குழக்கட்டை
 இது செஞ்சு முடிச்ச உளுத்தம் கொழக்கட்டை
இது என்னன்னு பாக்கறீங்களா , எப்டியும் கொஞ்சம் மாவும்  மீதி இருக்கும் ,  , கொஞ்சம் காரப்பொடி , சேர்த்து  கடுகு தாளித்து , உப்பு சேர்த்து சின்ன சின்ன
உருண்டைய உருட்டி (சீடை மாதிரி) போட்டு , இதையும் ஆவில வச்சு
எடுக்கணும்.  பாருங்களேன் , இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி
எப்டி ஜமாய்க்கப் போறோம்னு .

இத பாத்து எதவது சந்தேகம் இருந்த எனக்கு எழுதுங்க , உங்கள் கேள்விகளுக்கு விடை சொல்ல காத்திருக்கும்  சாவித்திரி வாசன்

2 comments:

  1. Om Sri Maha Ganapathaye Nama:

    Namaskaram Vasan Srini Sir,

    Explained in detail with the pictures.

    Nice 3 types of kozhakattai.

    Thank you
    geetha

    ReplyDelete
  2. சாவித்ரி வாசன் அவர்களே, மிகச் சிறந்த விளக்கம். சந்தேகமே கேக்க முடியாத அளவுக்கு விளக்க முறை. பூரணத்திற்க்கு வெல்லம் என்ன அளவுன்னு மட்டும் தெளிவா சொல்லுங்கோ !
    for this page uhave given the respect to Savithri madam . Great Vasansrini sir.

    Mrs. Gowthami Vembunathan GV

    ReplyDelete