மகானுக்கு அன்புக்கட்டளையிட்ட மாமனிதர்
தேபெருமா நல்லூர் சிவன் என்றால் சட்டென்று யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் ஆனால் அன்னதான சிவன் என்றால் எல்லோருக்கும் தெரியும். அன்னதானம் செய்வதில் என்றைக்குமே சளைக்காதவர்
அவருக்கு காஞ்சி மகானிடம் அளவுகடந்த பக்தியுண்டு அந்த பக்தியின் காரணமாக காஞ்சி மகானுக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதினர், மகான் பல தினங்கள் உபவாசம் இருந்த காலம் அது இதனால் தனது உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை மகானுக்கு தெரிவித்து, இதில் பல விஷயங்கள் குறிப்பிட்டு இருந்தார் .
"மகான் தொடர்ந்து உபவாசம் இருந்தால், அவரது உடல்நிலை கெட்டுவிடும். அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் பக்தர்கள் நீண்ட காலம் அவரது அருளைப் பெற முடியும். ஆதலால்

சிறிதளவேனும் அன்ன பிட்ச்சை ஏற்க்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லை என்றால் சீதோஷ்ண ஸ்திதிக்கு ஏற்றவாறு வெந்நீரில் குளிக்கவேண்டும்.
சமுத்திர ஸ்நானம் செய்ய போகும்போது துணையோடு போகவேண்டும்.
நதிகளில் ஆழம் பார்த்து தான் இறங்கவேண்டும் .
பூஜையை முடித்த பின் சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும்.
இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிக்கக் கூடாது.
தாங்கள் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என்கிற காரணத்திற்காக இக்கடிதத்தை எழுதுகின்றேன் என்று முடித்திருந்தார்.
மகான் அக்கடிதத்தை ஒருமுறை அல்ல; இருமுறை படிக்கச் சொல்லி புன்முறுவலோடு அதைக் கேட்டார்கள். மடத்தில் உள்ள அனைவருக்கும் சிவன் மீது அளவு கடந்த மரியாதை. மகான் அவசியம் இதற்க்கு பதில் எழுதுவார் என்று நினைத்தார்கள்.
ஆனால் அதற்க்கு பதிலாக, ஒரு நபர் மூலம் செய்தியாக தன் எண்ணத்தை சொல்லி அனுப்பினார்;
"கடிதத்தில் எழுதியுள்ளபடி எல்லாம் நடைபெறும்" என்கிற செய்தி சிவனிடம் சொல்லப்பட்ட பிறகுதான் அவர் மனம் சமாதானம் அடைந்தது.
மகானிடம் இப்படி வேண்டுகோள் விடுக்க, அப்போது சிவன் ஒருவருக்குதான் மனோ பலம் இருந்தது. இதே வேண்டுகோளை சிவன், மகானை நேரில் பார்க்க வரும்போதும் கோரிக்கையாக வைப்பார். மகான் அவர்பால் பரிவு கொண்டு அவரைப் பாராட்டி மகிழ்வார் .
சிவனுக்கு முதிர்ந்த நிலை வந்தபோது, அவரை கவனித்துக் கொள்ள மகான் மடத்து சிப்பந்திகளை அனுப்பி இருந்தார். தனது கடைசி காலத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்ற சிவன் அங்கேயே இறைவனடி சேர்ந்தார் .
மகான் அந்த சமயம் காசி யாத்திரை சென்றிருந்தார், திரும்பிய பிறகுதான் சிவனின் மறைவு குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது
"சிவன் ஒரு சன்னியாசி இல்லை இன்றாலும் துறவியை போல் பற்றற்ற வாழ்கையை மேற்கொண்டு இருந்தார். பிறருக்கு சேவை செய்ததுடன் "பசி" என்று வந்தவர்களுக்கு அன்னமளிக்காமல் அனுப்பியதில்லை. மிகவும் புண்ணியம் செய்த அவர் நிச்சயம் மோட்சத்திற்குதான் போவார்" என்று சொன்ன மகான். கும்பகோணத்திலும் , திருபுவனத்திலும் உள்ள கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுமாறு கட்டளையிட்டார்.
சிவன் மறைந்த பத்தாவது நாளன்று கும்பகோணத்திலுள்ள மடத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளிக்க மகான் ஏற்பாடு செய்தார். தனகென்று ஏதும் வைத்துக் கொள்ளாத சிவன் இறக்கும் தருவாயில், தன்னிடம் இருந்த சொற்ப பணத்தை முழுவதும் தர்மத்திற்காக செலவிடும்படி கூறியருந்தார் .
அதனால் இப்பணத்தை கொண்டு ஹரிஜனங்களுக்குப் பயன்படும் வகையில் குளம் ஒன்றை செப்பனிட்டு வழங்கும்படி உத்தரவிட்டார்
அன்னதான சிவன் மீது மகான் கொண்டிருந்த அன்புக்கு அளவு இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. மகானை ஆதரவோடு பார்த்து
அன்புக்கட்டளையிட்ட மாமனிதார் தான் இந்த அன்னதான சிவன்

No comments:
Post a Comment