Thursday, September 20, 2012

தாளங்களை அமைத்தவர்!


தாளங்களை அமைத்தவர்!

நந்திதேவர் ஆடலுக்கும் பாடலுக்கும் அடிப்படையாக அமைந்த தாளங்களை வரையறுத்தவர். சிவபெருமான் திருநடனம் புரிகையில் அவர் தாள வாத்தியமான சுத்த மத்தளத்தை முழக்குகின்றார். நந்தி கணத்தைச் சேர்ந்தவர்கள் பெருமானின் ஆட்டத்திற்கு ஏற்ப குட முழாவை முழக்குகின்றனர். குடமுழா முழக்கும் நந்தி கணத்துள் ஒருவரே மணிவாசகராக மண் மீது வந்து தோன்றினார் என்னும் கருத்து உள்ளது. "குடமுழா நந்தீசரை வாசகனாய்க் கொண்டார்' என்னும் தேவார வரி இதைக் குறிக்கும்.

நடராஜர் ஓவியங்களில் மத்தளம் வாசிக்கும் நந்தியையும் ஓவியமாகத் தீட்டியுள்ளனர். தூண் சிற்பங்களிலும், நந்திதேவர் மத்தளம் வாசிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. கலைஞர்கள் நந்தி தேவரை நாட்டியக் கலையின் குருவாகக் கொண்டு போற்றுகின்றனர். ஞானவான்கள் தம்மில் அறிஞருக்கு நந்தி என்னும் பட்டத்தை அளிப்பது போலவே கலையில் தேர்ச்சியும் பெரும் புலமையும் பெற்றுள்ள தவில் வித்வான்களுக்கும், மிருதங்க வித்வான்களுக்கும் "கலியுக நந்தி' என்னும் பட்டம் அளித்து கௌரவிக்கின்றனர்.

No comments:

Post a Comment