Friday, September 21, 2012

மேகமண்டலத்துக்கு மேல்



தினசரி தியானம்



மேகமண்டலத்துக்கு மேல்

ஒண்பொருளே, உயர்ந்த எண்ணத்தில் என் உள்ளம் யாண்டும் உறைந்திருப்பதாகுக.


ஆகாய விமானம் மேலே பறக்கிறது. மேக மண்டலத்துக்கு மேலே அது போய்விட்டால் அதன் வேகமான பயணத்துக்குத் தடையொன்றுமில்லை. மனிதன் எண்ணத்தில் மிக உயரமாய்ப் போய்விடுவானானாம் உலகத்தவர்களிடமுள்ள குறைபாடுகளோடு அவனுக்கு முரண்பாடு உண்டாகாது.


ஒன்றுஎன் றிரு; தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றுஎன் றிரு; பசித்தோர் முகம்பார் நல் அறமும் நட்பும்
நன்றுஎன் றிரு; நடு நீங்காமலே நமக்கு இட்டபடி,
என்றுஎன் றிரு; மனமே உனக்கே உப தேசம் இதே.
-பட்டினத்தார்

No comments:

Post a Comment