Thursday, September 6, 2012

புளிப்புத் தேன்குழல்



புளிப்புத் தேன்குழல் : By:- Savithri Vasan


இதுக்கு பேர் புளிப்புத் தேன் குழல்
கண்டிப்பா இதை புளித்த மோர் கொண்டுதான் செய்யவேண்டும்
மோர் இயற்கையாக புளிக்க வேண்டும் . அது என்ன இயற்கையா
புளிக்க வைக்கறது .

உடம்பு வியர்க்க என்ன பண்றோம் , குளிருட்டப்பட்ட அறையை
விட்டு வெளியே வந்தால் , கொஞ்சமாவது வியர்க்கும் அதுபோல்
குளிர் சாதனப் பெட்டியில் இருந்து மோரை எடுத்து வெளியே
வைத்தால் மோர் புளிக்கும்.

தேவை :-

அரிசிமாவு 2 கப்
காரப்பொடி 2 டீஸ்பூன்
பெருங்காயம் : கொஞ்சம்
உப்பு : தேவைக்கேற்ப

மோர் (புளித்தது) : 4 கப் .





அரிசிமாவு, உப்பு, காரப்பொடி , பெருங்காயம்
இவையனைத்தும் வீட்டில் இருக்கும் புளிப்பு
மோரில் கலந்து கெட்டியாக பிசைந்து வைத்துக்
கொள்ளவும் (முறுக்கு பதத்தில்)





இப்ப வீட்ல இருக்கற அச்சுக்குழல் எடுத்துக்கோங்க
மாவ உருண்டைய பிடிச்சு குழல்ல அடைச்சு
அப்டியே உங்க இஷ்டம் போல அடுப்புல
வாணலில எண்ணை வச்சு அதுல புழிங்க
நல்லா சிவந்து வரும்.




எடுத்து டப்பால போட்டு வச்சா , மதியம்
பசி நேரத்துல சாப்பிடலாம் , மாலை டீ / காபி
சமயத்தில் சாப்பிடலாம் . சில நேரங்களில்
மாலை சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு
குடுத்து (அவங்களை ஏமாத்தலாம்)


அது சரி அப்ப ஏன் தேன்  குழல் அப்டீன்னு ஏன் சொல்லறோம் 
நியாமான கேள்வி . 1) தேன்போல் இனிக்கும் , 2) இந்த முறுக்கு 
சுற்று பாருங்க தென் பூக்களின் குழல் போல் இருக்கும் .




குழல் இனிது யாழ் இனிது என்பர் மக்கள் தேன்குழல் சுவை 
அறியாதவர்




No comments:

Post a Comment