தினசரி தியானம்
நெடும் பயணம்
நதி கடலை நோக்கிப் பாய்ந்து கொண்டேயிருப்பது போன்று இறைவா, நான் உன்னை நோக்கிப் பயணம் வந்துகொண்டே இருப்பேனாக.
பயணங்களுள் பெரியது கடவுளை நோக்கிப் போகும் பயணம். அது பல கற்ப காலமாக நிகழ்ந்து கொண்டே இருக்கலாம். பின்பு, பயணங்களுள் மிகக் குறுகியதும் கடவுளை நோக்கிப் போகும் பயணமேயாம். அது நொடிப்பொழுதில் பூர்த்தி ஆய்விடலாம். அதெல்லாம் மனதைப் பொறுத்தது.
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்.
-மாணிக்கவாசகர்
No comments:
Post a Comment