Friday, September 21, 2012

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்

ஸ்ரீவில்லிபுத்தூர்  ., ஆண்டாள் சூடிய மாலை!  திருப்பதி சென்றது


திருப்பதி வெங்கடாசலபதிக்கு, புரட்டாசி விழாவில் சார்த்துவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு, சூடிய மாலை, நேற்று கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில், தினமும் ஆண்டாள் சூடிய மாலை அணிவித்து, பூஜைகள் நடக்கின்றன. மதுரை சித்திரை விழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு, ஆண்டாளுக்கு சூடிய மாலை, பரிவட்டம் அணிவிப்பது வழக்கம். இது போல், திருப்பதி வெங்கடசாலபதி கோவில், புரட்டாசி விழாவின் ஐந்தாம் நாள் கருட சேவையன்று, பெருமாளுக்கு  ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் சூடிய மாலையை சார்த்தி, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி, திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை ஆண்டாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, மாலை, கிளி சார்த்தி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாடவீதி, கந்தாடை வீதி வழியாக சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, பின், திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

1 comment:

  1. இந்த பூமாலைக்கு வேண்டி பூவை பயிரிட்டவன் , பூவை பறித்தவன், பூவை கட்டுபவரிடம் கொண்டு சென்றவன்,
    மாலையை கட்டியவன், கட்டிய மாலையை கோவிலில் சேர்த்தவன், மாலையை ஆண்டாளுக்கு சார்த்தியவன், சார்த்திய மாலையை எடுத்தவன், எடுத்த மாலையை சுமந்து சென்றவன், மாலையை சுமந்து சென்ற வூர்தி, அதனை ஓட்டுபவன் , திருப்பதி தேவஸ்தானத்தில் சேர்த்தவன், அங்கிருந்து பெருமாள் நடைக்கி கொண்டு சென்றவன் பின் அதை சார்த்தியவன் . இத்தனை பேரோட கைங்கர்யதுல நம்ம வாசன் சாரோட பங்கு நமக்கு இப்போ சுலபமா பார்க்க புகைப்படத்தோட பதிவு செய்தது. கோவிந்தா கோவிந்தா. ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete