சேஷாத்ரி சுவாமிகள்
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜர் - மரகதம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த இவருக்கு 'தங்கக்கை சேஷாத்ரி' என்றும் பெயர் உண்டு .
ஒருமுறை 3 வயது குழந்தையாக இருந்த சேஷாத்ரி கூடை நிறைய பொம்மைகள் விற்று வந்த ஒரு வியாபாரி வைத்திருந்த கிருஷ்ணர் பொம்மையை தனது கையால் தொட... சில மணி நேரங்களில் அத்தனை பொம்மைகளும் விற்று தீர்ந்தன. இந்த சம்பவத்திற்கு பிறகு ' தங்கக்கை சேஷாத்ரி' என்ற பெயர் பிரபலமாயிற்று . சிறு வயதிலேயே ஆன்மீக ஞானம் பெற்ற சேஷாத்ரி சுவாமிகள் பெற்றோரின் மறைவுக்கு பிறகு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். தொட்டது துலங்கும் என்பார்களே அது இவரது விஷயத்தில் கண்கூடாக நிருபனமாயிற்று. இவர் ஏதாவது
ஒரு கடைக்குள் நுழைந்து, பொருட்களை தொட்டு வீசிஎரிந்தால் அன்றைய தினம் அந்த வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. இதனால் தங்களது
கடைக்கு அவர் வர மாட்டாரா என்று ஏங்காதவர்களே திருவண்ணமலையில் இல்லை.
சேஷாத்ரி ஸ்வாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில்உள்ள கம்பத்தடி இளையானார் மண்டப வாசலில் அமர்ந்திருப்பார் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே கருதுவார்கள்
ஒருமுறை சேஷாத்ரி சுவாமிகள் அந்த மண்டப வாயிலில் அமர்ந்திருந்த போது பக்தர் ஒருவர் அவருக்கு உணவு பொட்டலம் ஒன்றை கொடுத்து அதை
உன்னும்மாறு வேண்டினார் அந்த பொட்டலத்தில் இருந்து சிறுது உணவை எடுத்து உட்கொண்டவர் திடீரென்று என்ன நினைத்தாரோ மீதம் இருந்த உணவை மேலும் கீழும் அள்ளி வீசினார். உணவை கொண்டுவந்து கொடுத்த பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை உணவை ஏன் இப்படி வீணாக்குகிறீர்கள் என்று கேட்கவும் அவருக்கு பயமாக இருந்தது. அனாலும் " உணவை உண்ணாமல் இப்படி கீழே இறைக்கிறீர்களே ஏன் சுவாமி என்று கேட்டார்
அதற்க்கு சேஷாத்ரி சுவாமிகள் "நீ எனக்கு தந்த உணவை பூதங்களும் கேட்கின்றன தேவதைகளும் கேட்கிறார்கள் அதனால்தான் இப்படிச் செய்கிறேன் என்றவர் மறுபடியும் பொட்டலத்தில் இருந்த உணவை அள்ளியெடுத்து வீசினார்.
பக்தருக்கோ ஒன்றும் புரியவில்லை சுவாமி நீங்கள் சொல்லும் "பூதம் தேவதைகள்" என் கண்களுக்கு தெரியவில்லையே? என்று கேட்டார், பக்தர் கேள்வியில் சற்று கிண்டலும் தொனித்தது.
உடனே சுவாமிகள் அந்த பக்தரை சற்று முறைத்தார் "பூதம், தேவதைகளை காண முடியவில்லை என்கிறாய் அப்படித்தானே ?"
"அமாம்"
"அப்படிஎன்றால் அவற்றை உனக்கு காட்டுகின்றேன்" என்ற சுவாமிகள் அந்த பக்தரின் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தனது கட்டைவிரலை வைத்து
சிறிது அழுத்தினார் பக்தர் கண்களை மூடிக்கொண்டார் .
பிறகு "இப்போது பார்" என்றார் சுவாமிகள்
பக்தரும் கண்களை திறக்க... அங்கே அவர் கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தின , சுவாமிகள் வீசி எறிந்த உணவை கோரைப்பற்களுடன் தொங்கிய நாக்குடன் இருந்த பூதங்கள் வேகமா எடுத்து சப்பிட்டுகொண்டிருந்தன கிண்டலாக பேசிய பக்தரை அவை முறைத்தும் பார்த்தன.

திருவண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிகாலம் வரை வேறு எங்கும் செல்லாது அண்ணாமலையே தமது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து முக்தியடைந்த மாபெரும் மகான் இவர் தன்னை தேடி வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை அனாமலையை கிரிவலம் வர வைத்த பெருமை இவருக்கு உண்டு
திருவண்ணமலை கிரிவலப் பாதையில் அக்னி லிங்கம் அருகே இவரது ஆசிரமம் அமைந்துள்ளது
No comments:
Post a Comment