Thursday, September 13, 2012

சைக்கிள் பெடல்


                                                                சைக்கிள் பெடல்

 By:Savithri Vasan in Sage of Kanchi

வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை - கும்பகோணம்

புரட்டாசி 3 வெள்ளிக்கிழமை 19-9-1947

                                                            சைக்கிள் பெடல் 



                                                       

ஒருவன் சைக்கிளை விட்டுகொண்டு போகிறான் கால்களால் பெடலை அழுத்துகிறான் சைக்கள் வேகமா செல்கிறது நன்றாக பழக்கப்பட்டவன் பெடலை தீவிரமாக சுழற்றுகிறான் சைக்கிள் வேகமாக செல்கிறது பிறகு பெடலை சழற்றுவதை நிறுத்துகின்றான் கைகள் மட்டும் சைக்கிள் கைபிடியை பிடித்துக் கொண்டிருக்கிறது கால் சும்மாவே இருந்தாலும் முன்பு வேகமாக சுழற்றியதால் சைக்கிள் சுகமாக சென்றுகொண்டிருக்கிறது .

அரசாங்கத்தில் அநேக பரிக்ஷை வைத்திருக்கிறார்கள் அந்த பரிக்க்ஷைகளில் அனேகமாக பிராமணர்கள் அனேகமாக முதன்மையாக தேறுகிறார்கள்.யோக்யதையை அனுசரித்து (Merit) சிலரை கலாசாலைகளில் செர்த்துகொள்வோம் என்று அரசாங்கத்தில் சில காலம் அங்கீகர்த்திருந்தபோதும் அந்த யோக்யதாம்சத்தில் பிராமணச் சிறுவர்களே அனேகமாக முன் வந்தனர்

யோக்யதாம்சத்திர்க்கு எவ்வளவு மார்க்கு வேண்டுமோ அதை விட பன்மடங்கு மார்க்குகள் வாங்கி யோக்யதாம்சத்தில் எவ்வளவு பேரை எடுக்கிறார்களோ அவ்வெண்ணிக்கையை விட எவ்வளவோ அதிக மடங்கு முன் வந்து நிற்கிறார்கள்.

இதெற்கெல்லாம் காரணம் ஒன்றிருக்கவேண்டும் . இப்பொழுது அந்த காரணம் ஒன்றும் தெரியவில்லை. ஆசார அனுஷ்டான விஷயத்தில் பிராமன மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஒரு வித்யாசமும் காணப்படவில்லை. சில விஷயங்களில் இவர்களை விட மற்றவர்களை மேலாவுங்கூடச் சொல்லலாம், அப்படி இருக்க இவர்கள் விசேஷமாக பாஸ் செய்யும் யோக்யதைக்கு மூல காரணம் என்ன? அதையும் கண்டுபிடிக்க வேண்டும்

பகவான் பக்ஷபாதம் செய்யமாட்டார். இன்று அந்தணரும் மற்றவரும் அனுஷ்டானத்தில் ஒரே விதமாக இருந்தாலும் மற்றவரை விட

சில விஷயங்களில் அந்தணர் இன்னும் மோசமாக இருந்தாலும் அந்தணருக்கு மாத்திரம் இவ்விதம் அதிக மேதையை பகவான்

அருளியிருப்பது ஏன்?



முன்னோர்களின் பெடல்
------------------------------------
இன்றைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னிருந்த அந்தணப் பெரியோர்கள் தாங்கள் க்ருதார்தர்களாக வேண்டியதற்கு எவ்வளவு ப்ரும்மதேஜஸ் வேண்டுமோ அதைவிட அதிகமாகவே தம் புண்ணிய வாழ்க்கை என்னும் "சைக்கிளை தீவிரமாக பெடல்"

செய்துவிட்டார்கள்.

இன்று நாம் ஒரு அனுஷ்டானம் செய்யாமல் அவர்கள் பெயரென்னும் கைப்பிடியை மாத்திரம் பிடித்துகொண்டிருப்பதால் "பாஸ்" செய்கிறோம்.

அவர்கள் நான்கு மணிக்கு ப்ரும்ம முகூர்த்தத்தில் எழுந்தார்கள்; நாம் அனேகமாக சூர்யன் எழுந்த பின்னரே நாம் எழுந்திருக்கிறோம்

அவர்கள் காலத்தில் சந்த்யாவந்தனம் செய்யாதவனை தேடி கண்டுபிடிக்கவேண்டும், நம் காலத்தில் செய்தவனை தேடி கண்டுபிடிக்கவேண்டும்
அவர்கள் காலத்தில் காலையிலும் மாலையிலும் சந்த்யாவந்தன படித்துறையில் கூட்டம் சேரும். நம் காலத்தில் காலை வேளைகளில் ஒருவிதமான "கிளப்" களிலும் மாலை நேரத்தில் வேறு விதமான "கிளப்"களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன

ஆத்மாவுக்கு உணவு ஊட்டவேண்டிய நேரத்தில் அனாத்மாவுக்கு உணவு ஊட்டுகிறோம்

நம் நாட்டிலுள்ள இதர மதஸ்தர்கள் எதோ ஒரு முறைப்படியாவது மாலை நேரத்திலும் இதர சில குறிப்பிட்ட சில சமயங்களிலும் ஈசனை நினைக்கும் பலத்தினால் உலக சம்பந்தம் ஒன்றுமில்லாமல் ஒரு ராஜ்யத்தையே பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்கள்

புக்கராயனின் குருவான வித்யாரண்யா சுவாமிகளும், சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாஸ் சுவாமிகளும் ஆசார சீலர்கள் அனுஷ்டனத்பர்கள், அனுபூதி நிஷ்டர்கள் நம் தர்மத்தை பாழ் செய்த பிற நாட்டவரின் பேயாட்டத்தை ஒழித்து தர்ம சாம்ராஜ்ய ஸ்தாபனம் செய்தவர்கள்

நாகரீகமா மிருகத்தனமா ?
--------------------------------------

மூன்று தலைமுறைக்கு முன்னிருந்த பெரியோர்கள் சரீரத்திலேற்படும் ஜல மல சுத்தி செய்யாதவர்கள் கிடையாது மண்ணும் ஜலபாத்திரமும் அவர்களுடன் எப்பவும் சித்தமாக இருக்கும். நாம் நாகரீகம் அடைந்துவிட்டோம் ஜல மல சுத்தியை கூட விட்டுவிட்டோம், மிருகங்களாய் விட்டோம் , இதுவே நம் நாகரீகம் .

சௌசம் என்னும் முதல் ஆசாரத்தை விட்டவன் செய்யும் எந்த கர்மானுஷ்டானமும் வெறும் சாம்பலில் செய்யும் ஹோமமே

மூன்று தலை முறைகளுக்கு முன்பு இருந்தவர்கள் செய்த பெடல் இன்னும் எத்தனை நாளைக்கு ஓடும்?, பெடல் செய்யப்படாத சைக்கிள் எவ்வளவு தூரம் ஓடும்? இப்பொழுதே மங்கி விட்டது

நமது பால்யத்தில் பிராமணச் சிறுவர்கள் முகத்தில் பார்த்த ப்ரும்ஹதேஜஸ் கூட இத்தலைமுறைகளிலுள்ள குழந்தைகளின் முகத்தில் காணோம் , படிப்புத் திறமையும் அப்படியேதான் .

ஆதலால் இனி நம் பின் தலைமுறைகள் ஈச்வர அனுக்ரகத்திலும் ப்ரும்ஹதேஜஸிலும் , உத்தம மேதையிலும் குறையாமலிருக்க

வேண்டுமானால் இனி நம் வாழ்வில் வர வர இவிஷயங்களில் க்ஷீனமடையாமல் இருக்க வேண்டுமானால் நாமும் தர்ம சாஸ்திரம் என்னும் "சைக்கிளின்" கர்மானுஷ்டானம் என்னும் "சக்கரத்தை" ஆசரனத்தால் "பெடல்" செய்யவேண்டும்

"காலடிபுரி வாசியே காஞ்சி மாமுனி"
Shri Mahaa Periyavaa's speach was published in this magazine in 19-9-1947 from Kumpakonam

No comments:

Post a Comment