Friday, September 14, 2012

சுவர் இருந்தால்தான்...!

பழ மொழி அறிவோம் --- சுவர் இருந்தால்தான்...!



                                      ஐந்தருவி சிதார் சுவாமி சங்கரானந்தர்






"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்'' என்பது பழமொழி. அதுபோல் உயிர் தங்கி வாழ உடல் தேவைப்படுகிறது. நீர் நிறைந்திருக்கும் ஆற்றைக் கடந்து அக்கரை சேருவதற்கு ஓடம் அவசியமாகிறது. பிறவிக் கடலைக் கடந்து பிறப்பில்லாப் பெருநிலையை அடையவும், பூரண ஞானம் பெறவும் வேண்டியுள்ள வரையில், இவ்வுடல் தேவைப்படுகிறது.அதனால்தான் திருமூலரும்,

""உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு

மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே'' என்கிறார்.

பூரண ஞானம் பெறுவதற்கு மனிதப் பிறப்பே ஏற்புடையது என்பது பெரியோர் வாக்கு.எனவே இம்மானிடப் பிறப்பில், இம்மனித சரீரத்திற்குள் உயிர் இருக்கின்ற காலத்திலேயே தான் அடைய வேண்டிய லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.


"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்'' 
வாழும் வாழ்கையில் சுவை இருந்தால்தான் சரித்திரம் படைக்கலாம்





No comments:

Post a Comment