Sunday, September 30, 2012

ஈசன் நிலை



தினசரி தியானம்



ஈசன் நிலை

புறப்பட்ட இடமாகிய உன்னையே வந்தடைய ஈசா, நான் ஓயாது முயன்று கொண்டிருக்கிறேன்.


இயற்கையில் ஒவ்வொரு பொருளும் தன் மூலஸ்தானத்தையே போய்ச்சேர முயன்று கொண்டிருக்கிறது. கடலினின்று புறப்பட்ட நீராவி இறுதியில் கடலை எட்டிவிடுகிறது. மனிதன் கடவுளிடத்திலிருந்து புறப்பட்டவன். அவனிடத்துள்ள மனோவிகாரங்களாகிய அச்சம், அகங்காரம் ஆகியவைகளை ஒழித்தால் அவன் மூலஸ்தானத்தை எட்டிவிடுகிறான்.


அச்சம் ஆங்காரம் அகத்தடக்கினால் பின்னை
நிச்சயமாம் ஈச னிலை.
-ஔவைக் குறள்

No comments:

Post a Comment