தினசரி தியானம்
எழில் வடிவம்
கல்லைச் செதுக்கி உயிர் ததும்பும் உருவத்தைச் சிற்பி சமைப்பது போன்று உள்ளத்தைத் திருத்தி நான் தெய்விகம் திகழ்பவன் ஆவேனாக.
அண்டங்களையெல்லாம் உருவாக்கும் மஹாசிற்பியாக சர்வேசுவரன் இருக்கிறார். என்ன நல்லவனாக உருவாக்கும் சிற்பி நான் ஆவேனாக. உள்ளுறையும் இறைவன் துணைகொண்டு என்னை நான் ஒழுங்குபடுத்தாவிட்டால் வேறு யார்க்கு அது இயலும்?
நினைப்பும் மறப்பும் அற நின்ற பரஞ்சோதி
தனைப்புலமா என்னறிவிற் சந்திப்ப தெந்நாளோ?
-தாயுமானவர்
No comments:
Post a Comment