Thursday, September 27, 2012

இடிக்கமுடியாத மாளிகை



தினசரி தியானம்



இடிக்கமுடியாத மாளிகை

தேவாதிதேவனே, தெய்வப் பெற்றியைப் பெற்றபின் நான் அதை இழப்பது எங்ஙனம்?


தனது உள்ளத்தில் மனிதன் கட்டும் மாளிகைக்குத் தூய்மை, நல்லறிவு, இரக்கம், அன்பு ஆகிய நான்கும் நான்கு சுவர்கள் ஆகின்றன. அமைதி அதன் கூரை. சிரத்தை அதன் தளம். இறைவழிபாடு அதன் வாயில், அருள் அதனுள் வீசும் காற்று. ஆனந்தம் ஆங்கு நிகழும் இசை.


போக்குவர வற்றவெளி போல்நிறைந்த போதநிலை
நீக்கமறக் கூடி நினப்பறுவ தெந்நாளோ?
-தாயுமானவர்

No comments:

Post a Comment