Tuesday, September 11, 2012

கோதுமை மாவு குழிப்பணியாரம்

கோதுமை (மாவு) குழிப்பணியாரம்


இது ஒரு புது  வகையான அண்மையில் எனக்கு அறிமுகம் ஆன
செய்முறை , உங்களுடன்  பகிர்ந்து கொள்வதில் பெருமை
கொள்கின்றேன்

பொதுவாக அரிசிமாவும் , உளுந்துமாவும் கலந்த கலவையில்
தான் குழிப்பணியாரம் செய்வது வழக்கம்  ஆனால் என் நண்பர்
வீட்டுக்கு சென்ற பொழுது பணியாரம் சாப்பிடுகிறீர்களா
என்று கேட்டார் , நான் வேண்டாம் இன்று காலையில் தான்
எங்க வீட்ல செஞ்சு சாப்டேன் என்று மறுத்தேன்

உடனே சமையல் அறையில் இருந்த அவர் மனைவி
சாவித்திரி இது மாதிரி செஞ்சு இருக்க மாட்டா நீங்க
சப்டுங்கன்னு சொல்லி 4 பணியாறம் என் முன் வைத்தார்

வாயில் முதலில்  ஒரு துண்டை போட்டதும்  (சற்று சூடாக
இருந்தபோதும்)வேகமாக அடுத்த வாய் சாப்பிட ஆவல்
தந்தது அதன் சுவை.

பாருங்களேன் என்னன்னு

பட்டாணி , உருளைக்கிழங்கு நன்றாக வேகவையுங்க


உருளைக்கிழங்கு தோல் உரித்து , வெங்காயம் பட்டாணி
காரப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி
வைங்க , கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும்


உப்பு போட்டு கரைத்த கோதுமை மாவில் உருட்டி வைத்துள்ள
உருண்டைகளை தோய்த்து பணியார கல் குழிகளில் போட்டு
திருப்பி திருப்பி விட்டு சிவந்து வந்ததும் வெளியே எடுக்கவும்


 
பாருங்களேன் பொன்னிறமாக எப்படி  ஜொலிக்குதுன்னு.
,
கிளம்பும் பொது கேட்டேன் , வீட்ல அவளுக்கும் கொஞ்சம்
தரேளான்னு , தந்தாங்க , அதுதாங்க மேல தட்ல இருக்கறது

என்ன நாளைக்கு நம்ம வீட்ல செஞ்சுடலாமா ?,


No comments:

Post a Comment