சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா துவக்கம்!
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆவணித்திருவிழாவின் எட்டாம் நாள் தேரோட்டம் நடக்கிறது.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாக்களான மார்கழி, சித்திரை மற்றும் மாசி திருவிழாக்கள் சிவபெருமானுக்கும், ஆவணித்திருவிழா விஷ்ணு சுவாமியான திருவேங்கடவிண்ணவரம்
பெருமாள் சுவாமிக்கும் நடக்கிறது.
காலை 9.15 மணிக்கு மேல் விஷ்ணு சுவாமி சன்னதியின் நேர் எதிரேயுள்ள தனிக்கொடி மரத்தில் சங்கர நாராயணன் தந்திரியால் கொடியேற்றப்பட்டது. எட்டாம் நாள் விழாவன்று மாலை 4 மணிக்கு இந்திரன் தேரில் விஷ்ணு சுவாமி தம்பதி சமேதராய் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் ஆராட்டு நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் வாகன பவனி, சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
No comments:
Post a Comment