நாலடியார் - (372/400)
அங்கோட் டகலல்குல் ஆயிழையாள் நம்மொடு
செங்கோடு பாய்துமே என்றாள் மண்; செங்கோட்டின்
மேற்காணாம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
பொருள்:- அழகிய பக்கங்கள் உயர்ந்து, அகன்ற அல்குலைக்
கொண்ட, அணிகளை அணிந்த விலைமகள், ணாம் செல்வம்
உடையவராய் இருந்தபோது, 'நம்முடன் செங்குத்தான மலை
மீது ஏறி விழுந்து, உயிர் விடுவோம்' என்று காதில் உறுதிபடக்
கூறுவாள். தற்போது நம்மிடம் பொருள் இல்லாததால், 'மலை
உச்சிம்மேல் ஏறுவதற்கு முடியாதபடி காலில் வாத நோய்
வந்துள்ளது' என்று பொய்யாக நடித்து, கண்கலங்கி வீட்டிலேயே
இருந்து கொண்டு, மலைமீது ஏறி வர மாட்டாள். அதாவது,
விலைமகளின் அன்பான பேச்சு போலி என்பதை உணர்க!
No comments:
Post a Comment