Wednesday, September 12, 2012

நாலடியார் - (357/400)

நாலடியார் -  (357/400)

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ்  சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு  நன்றிசெய்து, ஒன்றுதீ தாயின்,
எழுநூறும் தீதாய் விடும்.

பொருள்:-

தமக்கு ஒரு நன்மையைச் செய்தவர் அதன்பின்
நூறு தவறு செய்தாலும் சான்றோர் அந்த ஒரு
நன்றியை எண்ணி தவறை பொறுத்துக் கொள்வார்.
ஆனால் கயவருக்கு ஒருவர் எழுநூறு நன்மைகள்
செய்து பின்னர் ஒரு தீமை செய்து விட்டாலும்
அந்தக் கயவன் முன் செய்த எழுநூறு நன்மைகளையும்
தீமையாகவே கருதுவான்.

No comments:

Post a Comment