Tuesday, September 11, 2012

நாலடியார் -- (356/400)

நாலடியார் -- (356/400)

---------------------------------


மனநலம் உள்ளும் குறவன்;-- பயன்தரு
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்தநன்று உள்ளுவர் சான்றோர் கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.


பொருள்:- குறவன் எப்போதும் தனக்கு வளம் தந்த
மலையினுடாய நன்மையையே நினைத்துக் கொண்டு
இருப்பான். உழவன், தனக்கு விளைச்சல் தந்த நிலத்தின்
பயனையே நினைத்துக்கொண்டு இருப்பான், அவர்களைப்
போல் சான்றோர்  தமக்கு நன்மை செய்தவரையே
நினைத்து பாராட்டிக் கொண்டு இருப்பார்கள். ஆனால்
கயவனோ, தன்னை மற்றவர் திட்டினதையே எண்ணி
அதை மறவாமல் நினைத்துக் கொண்டு பகைமையுடன்
இருப்பான்.

No comments:

Post a Comment