Monday, September 10, 2012

நாலடியார் (355/40)

நாலடியார் (355/40)

தளிர்மேலே நிற்பினும், தட்டாமல் செல்லா
உளிநீரார்  மாதோ, கயவர்; -- அளிநீரார்க்கு
என்னானும் செய்யார்; எனைத்தானும் செய்யவே
இன்னாங்கு  செயவார்ப்  பெறின் .

பொருள்:- தீயோர், இளந்தளிர் மேல் நின்றாலும்
மற்றவர் தட்டினால் அன்றி அல்லது தள்ளிவிட்டால்
அன்றி உளளே இறங்காத உளியின் தன்மையைக்
கொண்டவர். ஏனெனில் மற்றவர்க்கு இரங்கும் பண்பு
கொண்ட சான்றோர்க்கு அவர்கள் எந்த உதவியும்
செய்ய மாட்டார்கள். ஆனால், தமக்கு துன்பம் இழைத்து
கேட்பவரைப் பெற்றால், அவர்களுக்கு எவ்வளவானாலும்
உதவி செய்வார்கள்.


No comments:

Post a Comment